;
Athirady Tamil News

இணையவழி வங்கி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

0

இலங்கையில் இணையவழி வங்கி பயனர்களைக் குறிவைத்து பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல (Saruka Damunupola) குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மைக்காலங்களில் இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில், இது தொடர்பாக சாருக தமுனுபொல மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இணையவழி மோசடி
இதனடிப்படையில். கடந்த செப்டம்பர் மாதம் வரை இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறுவதுடன் இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் இணையவழி சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவையாகும்.

அத்தோடு, பெரும்பாலும் இணையவழி வங்கி பயனர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இணையவழி வங்கிச் சேவை
பெரும்பாலான நேரங்களில், இணையவழி வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

கடந்த காலங்களில் இணையவழி வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.