;
Athirady Tamil News

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கான தேர்தல்: வேட்புமனுத் தாக்கலின் பின் சிறிரெலோ ப.உதயராசா தெரிவிப்பு

0

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கானசந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்ப்பதாக சிறிரெலோ கட்சியின் செயலாளரும், ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார்.

சிறிரெலோ கட்சியானது ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்றையதினம் தாக்கல் செய்திருந்து. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரவித்த அவர்,

இம்முறை நாடு ஒரு மாற்றத்தினை கண்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரண்டு கட்சிகளே மாறிமாறி ஆட்சியமைத்திருந்தது. இம்முறை மூன்றாவது கட்சி ஒன்று வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது.

அந்தவகையில் ஊழல் அற்ற ஒரு தேசத்தினை கட்டிஎழுப்புவதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்க்கின்றோம். அதேபோன்று கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கிறது. நானும் கடந்த தேர்தல்களில் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்திருக்கின்றேன். அதனால் இந்த முறை எமக்கான சந்தர்ப்பம் உள்ளதாக முழுமையாக நம்புகின்றோம்.

அநுர ஆட்சியானது அவர்கள் சொல்வதை போல நல்லதை செய்து, ஊழலற்ற ஆட்சியினை நடாத்தினால் அவர்களுடன் இணைந்து அவர்களுக்கான ஒத்துழைப்பினை வழங்குவோம். அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அதனை தட்டிக்கேட்பதற்கும் தயங்கமாட்டோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.