;
Athirady Tamil News

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ள தென் கொரிய எழுத்தாளர்

0

2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் ( Han Kang)வென்றுள்ளார்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்
உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு
முன்னதாக கடந்த 7ம் திகதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 8ம் திகதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அதேபோல் நேற்று 9ம் திகதி வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் திகதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.