;
Athirady Tamil News

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் – பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

0

சொந்த தங்கையை அண்ணன் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், மாநில அரசு சார்பில் முக்யமந்திரி சாமுஹிக் விவா யோஜனா திட்டத்தின் கீழ் பல தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய தம்பதிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பதுடன், தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கி, ரூ35,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

அரசு நிதி
இந்த நிதியை பெறுவதற்காக அண்ணன் தங்கை தம்பதிகளை போல திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே திருமணமான தம்பதிகளும் இந்த பணத்தை பெறுவதற்காக மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கொடுக்கப்பட்ட பணம் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அரசின் திட்டத்தில் முறைகேடு செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.