;
Athirady Tamil News

அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி

0

அரச அதிகாரிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை முறையாக பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க (Gamini Wijesinghe) தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களில் வாகனங்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றைப் பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான தொண்ணூறு ஆயிரம் வாகனங்களில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தகுதியற்ற நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச இலச்சினையுடன் அரச வாகனம்
இதேவேளை, கொழும்பு (colombo) – ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிணவறைக்கு அருகிலேயே அரச இலச்சினையுடன் அரச வாகனமொன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வாகனம் அரச இலச்சினையுடன் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்து வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள பிணவறைக்கு அருகில் நிறுத்திவிட்டு செல்லப்பட்டுள்ளது.

பிணவறைக்கு அருகே பல நாட்களாக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், உரிமையாளர் இல்லை என்ற தகவல் தெரியவந்ததையடுத்து வெளிநபர் மூலம் வாகனத்தினை வைத்தியசாலை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையினர் தலையிட்டு, இது குறித்து நிர்வாகத்துக்குத் தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் வாகனத்தின் புகைப்படங்களுடன் சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.