;
Athirady Tamil News

டாடாவின் காலில் விழுந்த பிரபல போட்டி நிறுவனத் தலைவர்: டாடா கேட்ட கேள்வி

0

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து, அவரது நற்குணாதிசயங்களைக் குறித்த பல செய்திகள் வெளியாகிவருகின்றன.

அவ்வகையில், டாடா நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் தலைவர், தனது நிறுவன நிகழ்ச்சி ஒன்றிற்கு டாடாவை அழைத்தது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

போட்டியாளர்களும் மதித்த உயர்ந்த மனிதர்

இந்திய கார்ப்பரேட் உலகில் தொழில்முறைப் போட்டியையும் தாண்டி சக நிறுவனத் தலைவர்களிடம் மரியாதை வைத்துள்ளார் டாடா.

அவ்வகையில், தனக்கும் டாடாவுக்கும் உள்ள நட்பு குறித்து பேசியுள்ள இன்ஃபோசிஸ் நிறுவன இணை நிறுவனர் N.R. நாராயணமூர்த்தி, டாடாவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை, தனது நிறுவன நிகழ்ச்சி ஒன்றிற்கு டாடாவை அழைத்திருந்தாராம் நாராயணமூர்த்தி. அந்த நிகழ்ச்சி டாடா குழும நிறுவனரான ஜாம்செட்ஜி டாடாவின் நினைவாக நினைவிடம் ஒன்றை திறந்துவைக்கும் நிகழ்ச்சி ஆகும்.

இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அந்த நினைவிடத்தை திறந்துவைக்க நாராயணமூர்த்தி டாடாவை அழைக்க, தனது போட்டியாளரான நாராயணமூர்த்தி, தனது அலுவலகத்தில் ஜாம்செட்ஜி டாடாவின் நினைவாக நினைவிடம் அமைப்பதை அறிந்து வியப்படைந்தாராம் டாடா.

நான் உங்கள் போட்டியாளர், அப்படியிருக்கும்போது, நீங்கள் இப்படி ஜாம்செட்ஜி டாடாவின் நினைவாக நிகழ்ச்சி நடத்துவதும், அதற்கு என்னை அழைப்பதும் வழக்கத்துக்கு மாறாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது என டாடா நாராயணமூர்த்தியிடம் கூறியுள்ளார்.

அதற்கு நாராயணமூர்த்தி, இல்லை ரத்தன், ஜாம்செட்ஜி டாடா எல்லா இந்திய நிறுவனங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்று கூறினாராம்.

டாடாவின் காலில் விழுந்த போட்டி நிறுவனத் தலைவர்

இருவருக்கும் நல்ல நட்பு தொடர, 2020ஆம் ஆண்டு, டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த விருதையும் நாராயணமூர்த்திதான் டாடாவுக்கு வழங்கியுள்ளார்.

அதைவிட ஆச்சரியம் என்னெவென்றால், விருதை வழங்கிவிட்டு, டாடாவின் கால்களைத் தொட்டு வணங்கியும் உள்ளார் நாராயணமூர்த்தி.

அந்தக் காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.

டாடாவும், வாழ்நாள் சாதனையாளர் விருதை, தன் நீண்டநாள் நண்பர் கையால் வாங்கியதை தான் பெருமையாக கருதுவதாகக் கூற, இரண்டு பேரின் நற்குணங்களையும் பலரும் மனதார வியந்து பாராட்டினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.