;
Athirady Tamil News

இலங்கை – இந்தியா புகையிரத பாதை தொடர்பில் மீண்டும் ஆராய்வு

0

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஐந்து பில்லியன் டொலர் வீதி புகையிரதபாதை இணைப்பு திட்டம் தொடர்பில் மீண்டும் ஆராயப்படுவதாக இந்திய சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கான செலவை இந்தியாவே பொறுப்பேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது பெரும் இரு தரப்பு திட்டம்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பெரும் இரு தரப்பு திட்டம் இது ஆகும்.

கடந்த மாதம் நான் இந்தியாவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டேன்,நாங்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் திருகோணமலைக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றையும்,புகையிரதபாதையொன்றையும் அமைக்கவுள்ளோம் என பிரபாத்சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இருநாடுகளினதும் வர்த்தகர்கள் அதிகளவு கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளதாலேயே இது குறித்து திட்டமிடப்படுவதாக அவர் கூறினார்.

புகையிரத தரைப்பாதையை அமைத்தால் இரு தரப்பினருக்கும் அது உதவியாக அமையக்கூடும் என குறிப்பிட்ட அவர்,ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்திற்கு அது உதவும் என மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.