;
Athirady Tamil News

ஹிஸ்புல்லா சுரங்கத்திற்குள் உள்ள ரகசியங்கள் என்ன? இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ!

0

லெபனானின் ஹிஸ்புல்லா சுரங்கத்திற்குள் உள்ள ரகசியங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

ஹிஸ்புல்லா ரகசிய சுரங்கம்

இஸ்ரேலிய படைகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலிய ராணுவத்தினர் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் ரகசிய சுரங்க பாதை தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் இஸ்ரேலிய ராணுவத்தினர் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கப் பாதைக்குள் 100 மீட்டர் தூரம் வரை செல்வதை பார்க்க முடிகிறது.

மேலும் இஸ்ரேலிய ராணுவத்தினர் கடந்து செல்லும் 100 மீட்டர் தூரத்தில், இரும்பு கதவுகள் கொண்ட அறை, A.K 47 துப்பாக்கிகள், படுக்கையறை, கழிவறை, ஜெனரேட்டர்கள் சேமிப்பு அறை, தண்ணீர் தொட்டிகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை இருப்பதை பார்க்க முடிகிறது.

இது முற்றிலும் மாறானது
அத்துடன் இந்த வீடியோவில் பேசும் இஸ்ரேலிய ராணுவ வீரர், நாங்கள் லெபனான் எல்லையை கடந்து தெற்கு லெபனான் கிராமங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் என்ன செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவின் சுரங்க பாதைகள், நாங்கள் காசாவில் பார்த்த ஹமாஸ் படையினர் சுரங்கப்பாதைகள் போல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.