;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு பேரிடி: ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்த நாடு!

0

இஸ்ரேலுக்கு (Israel) ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அறிவித்துள்ளார்

அமெரிக்கா (United States) உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி காணப்படுகிறது.

இந்நிலையில், “காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு உறுதி
இதேவேளை, ஈரான் (Iran) மீதான எதிர்த் தாக்குதலை மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் (Israel) அமெரிக்காவிற்கு (USA) உறுதியளித்துள்ளது.

அதன் படி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் மீதான எதிர்த் தாக்குதல் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களுக்குப் பதிலாக இராணுவ இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “நாங்கள் அமெரிக்காவின் கருத்துக்களைக் கேட்கிறோம், ஆனால் எங்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் எங்கள் இறுதி முடிவுகளை எடுப்போம்” குறிப்பிடப்பட்டுள்ளது.

40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்
இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்த நிலையில் ஒரு ஆண்டை கடந்தும் போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.