கனடாவில் வீணாக்கப்படும் பில்லியன் லிட்டர் பால்.! சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு
கனடாவின் பால் விற்பனை மற்றும் உற்பத்தி மேலாண்மை அமைப்பு (DSMS) மூலம் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரம் லிட்டர் பால் வீணாகியுள்ளதாக Journal of Ecological Economics இதழில் வெளியான புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த DSMS அமைப்பு பால் உற்பத்தியை நுகர்வோர் தேவைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த அமைப்பு குறைந்த உற்பத்தி மூலம் இழப்புகளை சந்திக்கக் கூடாது என்பதற்காக, நாட்டில் அதிக உற்பத்தி ஏற்படுத்தி, பல விவசாயிகளை உபரி பாலைக் குப்பையில் கொட்டத் தூண்டுகிறது.
2012 முதல் 2021 வரை, 6.8 பில்லியன் லிட்டர் பால் (உற்பத்தியின் 7%) கொட்டப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பால் வீணாவதால் 6.7 பில்லியன் டொலர் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கியா கூறுகிறது.
பால் வீணாகிவிடுவது சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
350,000 பயணிகள் கார்களின் ஆண்டு கார்பன் உமிழ்வு அளவுக்கு காற்று மாசுபாடு உருவாகியுள்ளது.
மேலும், பால் உற்பத்திக்காக பெரும் அளவில் நிலம், நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வளங்களும் வீணாகின.
ஆய்வாளர்கள், இந்த பால் மேலாண்மை அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.