;
Athirady Tamil News

இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

0

நாட்டில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனையவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக விசேட அரச நிறுவனம் ஒன்று நிறுவப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்களை மீளமைக்கும் நிறுவனம் என்ற பெயரில் புதிய நிறுவனம் உருவாக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றன.

குறித்த நிறுவனம் உலகின் அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டிய வருமானங்கள், நிதிச் சலவையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானங்கள், வேறு வகையிலான சொத்துக்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ காணப்பட்டால் அவற்றை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அரசாங்கத்திற்கு கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் இரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.