;
Athirady Tamil News

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

0

நாடளாவிய ரீதியில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த டிப்போக்களின் முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரி அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு இடத்தில் திடீர் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.

பண மோசடி
அதன் பின்னர், குறித்த தரப்பினர் தாங்கள் வந்த வாகனத்தை சீர் செய்ய Ez cash மூலம் அவசர தொகையாக 10,000 ரூபாயை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு வந்துள்ளதாகவும், சில இடங்களில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர்கள் வாகனம் திருத்துமிட உரிமையாளர்கள் அல்லது குறித்த இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வேறு சில குறிப்பிட்ட நபர்களாக இருந்து திட்டமிட்டு, இந்த பண மோசடிகளை செய்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் எச்சரிக்கை
இந்த தொலைபேசி எண்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, பல சந்தர்ப்பங்களில் அந்த எண்கள் இறந்த நபர்கள் அல்லது வெளிநாட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சிம் அட்டை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அல்லது சில போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இவ்வாறான தொலைபேசி அழைப்பு வந்தால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மக்களைத் தொடர்பு கொண்டு, அழைப்பின் உண்மை மற்றும் பொய்யை சரிபார்த்துக் கொள்ளுமாறும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.