;
Athirady Tamil News

கனடாவில் மீண்டும் ஒரு உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள்

0

கனடாவில் மீண்டும் ஒரு உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்த உணவுப்பொருளை திரும்பப் பெறுவதாக உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

மீண்டும் ஒரு உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள்
கனடா மற்றும் அமெரிக்காவில், உறையவைக்கப்பட்ட waffle என்னும் உணவில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த உணவுப்பொருளைத் தயாரிக்கும் TreeHouse Foods என்னும் நிறுவனம், Great Value, Selection, Compliments மற்றும் No Name என்னும் பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்யப்படும் waffle உணவுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

என்றாலும், இந்த கிருமியால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உணவு தயாரிக்கும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பரிசோதனைகளில்தான் அந்த கிருமி பாதிப்பு இருந்தது தெரியவந்ததாகவும் TreeHouse Foods நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன், கிர்ணிப்பழங்கள், நொறுக்குத்தீனிகளில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அத்துடன், சில குளிர்பானங்களில் இதே லிஸ்டீரியா கிருமியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த லிஸ்டீரியா என்னும் கிருமி, சிறு பிள்ளைகள், வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்திக் குறைபாடு கொண்டவர்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.