ஹிஸ்புல்லா தலைவரின் இரகசிய பதுங்குகுழியில் கொட்டிக்கிடந்த தங்கம் மற்றும் பணம்
இஸ்ரேல்(israel) இராணுவத்தால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இரகசிய பதுங்குகுழியிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் முக்கிய வைத்தியசாலையான அல்சஹல் என்ற வைத்தியசாலைக்கு நேர் கீழாக பதுங்கு குழி உள்ளது. இந்த பதுங்கு குழி ஹசன் நஸ்ரல்லாவின் இரகசிய பதுங்கு குழியாகும்.
மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இதில் ஏராளமான தங்கம், பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவ செய்தித்தொடர்பாளர்
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறி உள்ளதாவது;
பெய்ரூட்டில் முக்கிய மருத்துவமனையான அல்சஹல் என்ற மருத்துவமனைக்கு நேர் கீழாக பதுங்கு குழி இருக்கிறது. இந்த பதுங்கு குழியை நாங்கள் தாக்கவில்லை. இந்த பதுங்கு குழி ஹசன் நஸ்ரல்லாவின் இரகசிய பதுங்கு குழியாகும்.
இதில் ஏராளமான தங்கம், பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த பணத்தைக் கொண்டு லெபனானை மறு கட்டமைக்கலாம். என கூறி உள்ளார்.