சற்று முன்னர் வெளியான அறிவிப்பு : நஸ்ரல்லாவின் வாரிசையும் வீழ்த்தியது இஸ்ரேல்
நஸ்ரல்லாவின் வாரிசு என அழைக்கப்படும் சஃபிதீன் (Safieddine)ஒக்டோபர் 4 நடத்தப்பட்ட விமானதாக்குதலில் கொல்லப்பட்டமை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் படைத்துறை வட்டாரங்கள் இன்று (23) அதிகாலை தெரிவித்துள்ளன.
ஹிஸ்புல்லாவின் நிர்வாக சபையின் தலைவரான சஃபிதீன், ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது வாரிசாகக் கருதப்பட்டார்.
ஹிஸ்புல்லாவின் நிலத்தடி உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்
இராணுவத்தின் கூற்றுப்படி, ஒக்டோபர் 4 அன்று நடந்த தாக்குதலின் போது பயங்கரவாதக் குழுவின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஹுசைன் அலி ஹசிமாவுடன் சஃபிதீன் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலத்தடி உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்டது.
ஹிஸ்புல்லாவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட போது தலைமையகத்தில் இருந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
மரணத்தை உறுதிப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்
தாக்குதலுக்கு பிறகு சஃபிதீன் தொடர்பில் இல்லை, ஆனால் இன்றுதான்(23) அவரது மரணத்தை உறுதிப்படுத்த முடிந்ததாக இஸ்ரேல் இராணுவம் (IDF)குறிப்பிட்டது.
அவரது மரணத்தை ஹிஸ்புல்லா இன்னும் அறிவிக்கவில்லை.
2017 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட சஃபிதீன், நஸ்ரல்லாவின் உறவினர் மற்றும் அவரைப் போலவே, இஸ்லாத்தின் நபி முகமதுவின் வம்சாவளியைக் குறிக்கும் கருப்பு தலைப்பாகை அணிந்த ஒரு மதகுரு ஆவார்.