;
Athirady Tamil News

மன அழுத்தத்தை குறைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்- தினமும் குடிக்கலாமா?

0

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் ஒன்றான நெல்லிக்காய் பார்க்கப்படுகின்றது.

வைட்டமின் சி அதிகமாக கொண்ட நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. நெல்லிக்காய் சாப்பிடும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

தொடர்ந்து 30 நாட்களுக்கு நெல்லிக்காய் ஜீஸ் குடித்து வந்தால் உடலில் ஏகப்பட்ட விளைவுகளை பார்க்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

அப்படியாயின் தினமும் நெல்லிக்காய் ஜீஸ் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தினமும் நெல்லிக்காய் ஜீஸ் குடித்தால் என்ன பலன்?
1. நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க ஆரம்பித்து முதல் நாட்களில் செரிமானத்தொகுதி மேம்படும். செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜீஸ் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றல்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

2. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இவர்கள் சளி, இருமல் போன்ற தொற்றுகளில் சீக்கிரம் சிக்க மாட்டார்கள்.

3. முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பவர்க்ள, பொலிவிழந்து இருப்பவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜீஸ் குடிக்கலாம். சரும பிரச்சினைகள் நாளடைவில் குறைந்து முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அத்துடன் வயிற்று வீக்கம், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கும் இது நிவாரணம் கொடுக்கும்.

4. 15 – 21 நாட்கள் தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடல்நலப் பிரச்சனைகள் வருவது குறைவாக இருக்கும். கண்பார்வை குறைவு பிரச்சினையுள்ளவர்கள் இது போன்ற ஆரோக்கியம் நிறைந்த பழங்களின் ஜீஸ் எடுத்து கொள்வது சிறந்தது.

5. நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் முடி உதிர்வு குறையும் என்கிறார்கள். அதே சமயம் நெல்லிக்காய் சாறு குடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் தலைமுடி பார்ப்பதற்கு பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் காணப்படும்.

6. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். எடை அதிகமாகவுள்ளவர்களுக்கு நெல்லிக்காய் ஜீஸ் உடற்பயிற்சியை அதிகமாக உதவிச் செய்யும்.

7. தொடர்ந்து 30 நாட்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்களின் மனநிலையில் மாற்றத்தை அவதானிக்கலாம். சிலர் அதிகமான வேலைப்பழு காரணமாக மன அழுத்த பிரச்சினையால் அவஸ்தைப்படுவீர்கள். இதுபோன்ற பிரச்சினையுள்ளவர்கள் நெல்லிக்காய் ஜீஸ் எடுத்து கொள்வது சிறந்தது. அத்துடன் உங்களுக்கு தேவையான அறிவாற்றல், பார்வை மற்றும் நினைவாற்றல் மேம்படும். மூட்டு வலி, வீக்கம் பிரச்சினை மற்றும் சர்க்கரை அளவுகளையும் சீராக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.