;
Athirady Tamil News

எங்கும் மரணத்தின் வாசனை… இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவிச்சை அடுத்து ஐ.நா அதிகாரி குமுறல்

0

வடக்கு காஸா முழுவதும் மரணத்தின் வாசனை எழுந்துள்ளதாக Unrwa தலைவர் நடுக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மரணத்தின் வாசனை

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாலஸ்தீனியர்களுக்கான நிவாரண முகமையின் தலைவர் Philippe Lazzarini தெரிவிக்கையில், வடக்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக மூன்று வாரம் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளது என்றார்.

தண்ணீர், உணவு மற்றும் மருத்துவப் பற்றாக்குறை குறித்து தனது ஊழியர்கள் புகார் செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், வடக்கு காஸா எங்கும் மரணத்தின் வாசனையை உணர முடிவதாகவும், இறந்த உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன அல்லது சாலைகளில் கேட்பாரின்றி கிடக்கின்றன என்றார்.

ஆனால் உடல்களை அகற்றும் பணிகள் அல்லது மனிதாபிமான உதவிகளை வழங்குவது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கு காஸாவில், மக்கள் மரணத்திற்காக காத்திருக்கிறார்கள்.

அவர்கள் வெறிச்சோடியவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும், தனிமையாகவும் உணர்கிறார்கள். அவர்கள் ஒரு மணி நேரத்திலிருந்து அடுத்த மணிநேரம் வரை ஒவ்வொரு நொடியும் மரணத்திற்கு பயந்து வாழ்கிறார்கள் என Philippe Lazzarini தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச கோரிக்கை

மேலும், பாலஸ்தீனிய குடும்பங்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்படாமல் பாதுகாப்பாக வெளியேற ஒரு சில மணிநேரங்களுக்கேனும் உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் போருடன் எந்த தொடர்பும் இல்லாத அப்பாவி பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற குறைந்தபட்ச கோரிக்கை இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசா பகுதி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, ஜோர்தான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு UNRWA கல்வி, சுகாதாரம் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த அக்டோபரில் இருந்து காஸாவில் உதவி நடவடிக்கைகளின் முதுகெலும்பாகவும் UNRWA செயல்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.