ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிடியாணை : உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு (Johnston Fernando) எதிராக உயர் நீதிமன்றம் (High Court) பிடியாணை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு (Bribery Commission) தாக்கல் செய்துள்ள வழக்கில் முன்னிலையாக தவறியமையினால் உயர் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (23) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட BMW வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.