அருகம்பே செல்லவேண்டாம்; அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியா கனடாவும் எச்சரிக்கை!
இலங்கையின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான அம்பாறை அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.
அருகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் கிடைத்துள்ளளாக கூறியிருந்தது.
அதோடு , அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரித்தானியாவும் தனது பிரஜைகளை அங்கு செல்லவேண்டாம் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளும் எச்சரிக்கை
அதேவேளை அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும் விடுத்துள்ளது.
இந்நிலையில் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.