ரஷ்யா நாசவேலைக்கான முயற்சி… இணைத்தூதரகத்தை மூட வைத்த ஐரோப்பிய நாடு
ரஷ்யாவின் நாசவேலை முயற்சிகள் காரணமாக மேற்கு நகரமான போஸ்னானில் உள்ள ரஷ்ய இணைத் தூதரகத்தை மூடுவதாக போலந்து அறிவித்துள்ளது.
ரஷ்யா முன்னெடுப்பதாக
குறித்த தகவலை போலந்தின் வெளிவிவகார அமைச்சர் Radoslaw Sikorski செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால் போலந்தின் தொடர்புடைய முடிவுக்கு தக்க பதிலடி உறுதி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை ரஷ்யா குறிவைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள போலந்து, நெருப்பு வைப்பது, சதி செய்வது மற்றும் உளவு பார்க்கும் வேலைகளை ரஷ்யா முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, போலந்தின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் 51 வயது உக்ரேனிய குடிமகன் என்றே கூறப்படுகிறது. மேற்கு போலந்து நகரமான வ்ரோக்லாவில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலைக்கு தீ வைக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் மீதான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
வலுவான ஆதாரங்கள்
இதன் காரணமாகவே ரஷ்ய இணைத்தூதரகத்தை மூடிவிடும் நிலைக்கு போலந்து தள்ளப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவர நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.
நாசவேலை முயற்சி நடந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த நாசவேலைக்குப் பின்னால் வெளிநாட்டு உளவுத்துறை இருப்பதாகவும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்றே அமைச்சர் Radoslaw Sikorski தெரிவித்துள்ளார்.
மேலும், போலந்து மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது நாசவேலை முயற்சிகளுக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் என்ற முறையில் தம்கிடம் தரவுகள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.