வடகொரிய தூதருக்கு ஜேர்மனி சம்மன்
பெர்லினிலிருக்கும் வடகொரிய தூதருக்கு ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது.
வடகொரியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா படைவீரர்களை களமிறக்குவது தொடர்பான பிரச்சினை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துவருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் போர் செய்வதற்காக 3000 வடகொரிய வீரர்களை ரஷ்யாவுக்கு அந்நாடு பயிற்சிக்கு அனுப்பியுள்ளதாக தென்கொரிய உளவு ஏஜன்சி தெரிவித்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அத்துடன், டிசம்பரில் மேலும் 10,000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும்பட்சத்தில், தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிவு செய்ய இருப்பதாக சமீபத்தில் தென்கொரியா தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், ரஷ்யாவுக்கு வடகொரியா அளித்துவரும் ஆதரவு தொடர்பில் வடகொரிய தூதருக்கு ஜேர்மன் வெளியுறவு அலுவலகமும் சம்மன் அனுப்பியுள்ளது.
Sollten die Berichte über nordkoreanische Soldaten in der #Ukraine zutreffen und #Nordkorea damit den russischen Angriffskrieg in der Ukraine auch mit Truppen unterstützen, wäre dies gravierend und ein Verstoß gegen das #Völkerrecht. #DPRK (1/2)
— Auswärtiges Amt (@AuswaertigesAmt) October 23, 2024
இது குறித்து ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உக்ரைனில் வடகொரிய படைவீரர்கள் இருப்பது உண்மையானால், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா உதவுமானால், அது மிகத் தீவிரமான சர்வதேச விதி மீறல் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளிப்பது, ஜேர்மனியின் பாதுகாப்புக்கும் ஐரோப்பாவின் அமைதிக்கும் நேரடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.