;
Athirady Tamil News

நாசாவின் புதிய பணி

0

மு.தவக்குமார்

ஊடகக் கற்கைகள் துறை,

யாழ். பல்கலைக்கழகம்.

ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத் தொடர்ந்து அப்பல்லோ திட்டத்தில் முதல் ஆளுடன் அனுப்பப்பட்ட பணி அப்பல்லோ 7 பணியாகும்.

இந்த நேரடி ஒளிபரப்பு, தான் விண்வெளி ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டன எனலாம். முதல் முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளியில் இருந்து நேரலையில் பார்க்கவும் கேட்கவும் உலகெங்கிலும் உள்ள மக்களை அது அனுமதித்தது.

இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்து எதிர்கால ஒளிபரப்புகளுக்கு களம் அமைத்தது. இந்த நீண்ட வரலாற்றைக் கொண்ட நாசா ஆய்வு மையம் இன்று வரை விண்வெளி தொடர்பாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

நாசா லேசர் தகவல் தொடர்பு மூலம் அற்புதமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது. முதன்முறையாக, லேசர் தகவல்தொடர்புகள் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

இந்த தொழில்நுட்பம் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே தரவு எவ்வாறு அனுப்பப்படுகிறது என்பதில் புரட்சியை ஏற்படுத்துவதாக தொழிட்நுட்ப வல்லுனர்கள் உறுதியளிக்கின்றனர். பாரம்பரிய ரேடியோ அலைகளை விட கணிசமாக வேகமான மற்றும் திறமையான பரிமாற்றங்களை இது வழங்குகிறது.

இந்த முன்னேற்றங்கள் நாசாவின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆழமான விண்வெளி ஆய்வுக்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் இன்று நாசா மிகத் துல்லியமான விண்வெளி தகவல்தொடர்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான புதிய பாதைகளைத் திறக்கிறது.

நாசாவின் இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ப்ளு ஆரிஜினின் புதிய க்ளென் ரொக்கெட், ஒக்டோபர் 13, 2024 அன்று செவ்வாய் கிரகத்திற்கான நாசா பயணத்துடன் அறிமுகமாக இருந்தமையாகும். ESCAPADE (Escape and Plasma Acceleration and Dynamics Explorers) என பெயரிடப்பட்ட இந்த பணி, செவ்வாய் கிரக ஆய்வில் ஒரு முக்கிய படியைக் குறிக்கும் ப்ளூ ஆரிஜினின் புதிய ஹெவி-லிஃப்ட் ராக்கெட்டின் சோதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ESCAPADE அல்லது எஸ்கேப் அண்ட் பிளாஸ்மா ஆக்சிலரேஷன் மற்றும் டைனமிக்ஸ் எக்ஸ்ப்ளோரர்ஸ் என்பது, நாசாவின் ஒரு இலட்சியப் பணியாகும் . மேலும் உலக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற நாசாவின் மற்றுமொரு மயில்கல்லாகும். இது செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் மற்றும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்பு ஆகியவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.

செவ்வாயக்கிரகம், ஒரு காலத்தில் பூமியைப் போன்றது, அதன் வளிமண்டலத்தின் பெரும்பகுதியை இழந்து, குளிர்ந்த, தரிசு நிலப்பரப்பு தற்போது எஞ்சியுள்ளது. ESCAPADE என்பது NASA இன் Mall Innovative Missions for Planetary Exploration (SIMPLEx) திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது சிறிய, செலவு குறைந்த விண்கலத்தைப் பயன்படுத்தி முக்கிய அறிவியல் கேள்விகளுக்கு பதிலளிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும்.

இந்த பணி இரண்டு சிறிய, ஒரே மாதிரியான விண்கலங்களைக் கொண்டுள்ளது, இவை “இரட்டை ஆய்வாளர்கள்” என்று விவரிக்கப்படுகின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய முக்கியமான தரவுகளை சேகரிப்பதாகும். பல பில்லியன் ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறும் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தரவு அவசியமாகிறது.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் நீண்ட காலமாக அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தில் தடிமனான வளிமண்டலம் மற்றும் பூமியைப் போன்ற ஒரு காந்தப்புலம் இருந்ததாக நம்பப்படுகிறது.

இது மிகவும் மிதமான காலநிலையை கொண்டதாகும். இருப்பினும், அதன் காந்தப்புலம் பலவீனமடைந்து மறைந்ததால், கிரகத்தின் வளிமண்டலம் சூரியக் காற்றால் அரிக்கப்பட்டு, அதன் வளிமண்டலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை அகற்றி, மெல்லியதாகவும், மேற்பரப்பில் திரவ நீரை பிடித்து வைத்திருக்கும் திறனற்றதாகவும் ஆகியது.

இந்த வளிமண்டல இழப்பின் பின்னணியில் உள்ள செயல்முறைகளைப் புரிந்துகொள்வது செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, எதிர்கால ஆய்வு முயற்சிகளைத் தெரிவிப்பதற்கும் மற்ற கிரகங்களின் வாழ்விடத்தை ஆய்வு செய்வதற்குமாகும்.

கிரகங்களில் வளிமண்டலங்கள் எவ்வாறு உருவாகலாம் என்பதற்கான ஒரு சிறந்த ஆய்வை செவ்வாய் கிரகம் வழங்குகிறது. மேலும் வளிமண்டலத்தில் காந்த மண்டலத்தின் பங்கைப் பற்றிய நமது புரிதலில் உள்ள சந்தேகங்களை நிரப்ப நாசாவின் இந்த நுளுஊயுPயுனுநு பணி தயாராக உள்ளது.

ESCAPADE பணியானது பல முக்கிய அறிவியல் நோக்கங்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தின் இயக்கவியல் மற்றும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.

செவ்வாய் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை அளவிடுவதன் மூலம், காலப்போக்கில் கிரகத்தின் வளிமண்டலத்தில் எவ்வளவு விண்வெளியில் தொலைந்து போனது என்பதைக் கணக்கிட இந்த ESCAPADE உதவும்.

செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காந்தப்புலம் இல்லை என்றாலும், அது குறிப்பிட்ட மேற்பரப்புக்களில் காந்தப்புலங்களைக் கொண்டுள்ளது. ESCAPADE இந்த காந்த முரண்பாடுகள் சூரியக் காற்றுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை ஆய்வு செய்கிறது.

ESCAPADE பணியானது ஒரே மாதிரியான இரண்டு விண்கலங்களைக் கொண்டுள்ளது, அவை ஒரே ராக்கெட்டில் ஒன்றாக ஏவப்பட்டு பின்னர் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி தனித்துவமான, நீள்வட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்படும். சற்று வித்தியாசமான பாதைகளில் சுற்றுவதன் மூலம், இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் செவ்வாயின் காந்த மண்டலத்தை வெவ்வேறு பார்வை புள்ளிகளில் இருந்து அளவிட முடியும்.

சூரியக் காற்று என்பது சூரியனால் உமிழப்படும் சக்தியேற்றப்பட்ட துகள்களின் (பிளாஸ்மா) நிலையான பரவுதல் ஆகும், மேலும் அது ஒரு கிரகத்தின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அது காலப்போக்கில் வளிமண்டலத் துகள்களை அகற்றும். செவ்வாய் கிரகத்தைப் பொறுத்தவரை, காந்தப்புலம் இல்லாததால், வளிமண்டலம் இந்த வகையான அரிப்புக்கு ஆளாகிறது.

இவ்வகையில், ESCAPADE ஆனது சூரியக் காற்று எவ்வாறு அயனோஸ்பியருடன் (செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் சக்தியேற்றப்பட்ட அடுக்கு) தொடர்பு கொள்கிறது என்பதனையும் அளவிடுகிறது. கிரகத்தின் பின்னால் உள்ள ஒரு பகுதி, சூரியக் காற்று கிரகத்தின் காந்தப்புலக் கோடுகளை நீட்டி, வால் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இங்குதான் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறுவதைத் துரிதப்படுத்தும் பல செயல்முறைகள் நடைபெறுகின்றன.

ESCAPADE குறிப்பாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் கண்டுபிடிப்புகள் கிரக அறிவியலுக்கும் வெளிக்கோள்களின் ஆய்வுக்கும் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.