நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணித்தியால விசாரணை
புதிய இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், விசாரணையின் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற விசாரணையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அங்கிருந்து வெளியேறும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“வழக்கமாக, நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம் என்னவென்றால், அரசாங்கம் மாறும்போது, மற்ற அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்வது தான்.
வரச் சொன்னால் வருகிறோம். வேண்டுமென்றே நாட்டு மக்களுக்கு பொய் சொல்லி எங்களைப் பற்றிய தவறான வியூகத்தை உருவாக்கியுள்ளனர்.
2010 முதல் 2015 வரை எனது அலுவலகத்திற்கு ஒருவர் வந்து பணம் கொடுத்துள்ளார் என கூறியே இன்று என்னை அழைத்து வந்து விசாரித்தனர்.
இது அநாமதேய முறைப்பாடு. அந்த முறைப்பாட்டின் படி பணம் கொண்டு வந்து எனது அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அது பற்றி என்னிடம் கேட்கப்படுகிறது” என்றார்.
முதலாம் இணைப்பு
இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாமல் ராஜபக்ச இவ்வாறு குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று காலை 9 மணி அளவில் அவர் இவ்வாறு குற்ற விசாரணை பிரிவிற்கு முன்நிலையானார் என தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுகளுக்கு பதில்
விசாரணைக்கான காரணம் தொடர்பில் தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக்கூடிய ஒரே முறை இவ்வாறு விசாரணைகளில் பங்கேற்பதாக நாமல் தெரிவித்துள்ளார்.