திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு
புதிய இணைப்பு
நேற்று (24) தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான போரின் போது மேலுமொரு IDF வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட சிப்பாயின் பெயர் பென்-ஹரூஷ்(Ben-Haroosh,) (23 வயது) இதே சம்பவத்தில் மற்றுமொர வீரர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தெற்கு லெபனானில்(lebanopn) நேற்று முன் தினம் (23) பிற்பகல் ஹிஸ்புல்லாக்களுடன் நடந்த மோதலின் போது நான்கு இஸ்ரேலிய ரிசர்வ் சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்தனர், என்று இஸ்ரேல்(israel) படைத்துறை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் கார்மேலி படைப்பிரிவின் 222 வது பட்டாலியனில் பணியாற்றியவர்களாவர்.
சுரங்கப்பாயைிலிருந்து வெளியேறி தாக்குதல்
ஆரம்ப இஸ்ரேலிய படைத்துறை விசாரணையின்படி, பல ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்கள் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறி துருப்புக்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர். வீரர்கள் திருப்பிச் சுட்டனர், ஆனால் அவர்களில் எத்தனை பேர் தாக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்த ஆறு வீரர்களில், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வெவ்வேறு இடத்தில் மோதல்
இதேவேளை நேற்று (24) தெற்கு லெபனானில் நடந்த தனித்தனி சம்பவங்களில், 7வது கவசப் படையின் 77வது பட்டாலியன் அதிகாரி ஒருவர் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்ததாக IDF கூறுகிறது.
55 வது பராட்ரூப்பர் படையணியின் 7155 வது பட்டாலியன் ஒரு ரிசர்வ் ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்களுடனான போரின் போது பலத்த காயமடைந்தார்; மற்றும் 226 வது பராட்ரூப்பர் படையின் 6226 வது பட்டாலியன் ஒரு அதிகாரி பலத்த காயமடைந்தார்.
வீரர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என இஸ்ரேல் படைத்துறை மேலும் தெரிவித்துள்ளது.