குப்பை கொட்டுவதை கண்காணிக்க AI Technology.., தமிழக அரசு புது ஐடியா
பொது இடங்களில் விதிகளை மீறி குப்பையை கொட்டினால் அவற்றைக் கண்காணிக்க ஏஐ கமெரா (AI Camera) பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஏஐ கமெரா
சென்னையில் நீண்ட நாட்களாகவே பொது இடங்களில் குப்பைகள் தேங்கி காணப்படுகின்றன. மேலும், பேருந்து வழித்தட சாலைகளிலும் நடைபாதைகளிலும் குப்பைகள் கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த 10 நாட்களில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடமிருந்து ரூ.17 லட்சத்து 96 ஆயிரம் அபராதம் வசூல் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டக்கூடிய இடங்களைக் கண்டறிந்து ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கமெரா பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் ஆணையர் குமரகுருபரன் கூறுகையில், “இதன் மூலம் சட்டவிரோதமாக குப்பை கொட்டவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், இந்த ஏஐ கமெரா தொழில்நுட்பமானது சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.