ஒன்றாரியோவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான மருத்துவ கற்கை அனுமதி : வெளியான அதிர்ச்சி தகவல்
2026 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மருத்துவ கற்கைகளுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் (Government of Ontario) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 95 வீதமான வாய்ப்பு ஒன்றாரியோ மாகாண மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் ஐந்து வீதம் ஏனைய மாகாண மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கற்கை
அத்தோடு, குடும்பநல மருத்துவர்களாக எதிர்காலத்தில் சேவையாற்றுவதாக உறுதியளிக்கும் மாணவர்களுக்கு ஒன்றாரியோ அரசாங்கம் கூடுதல் சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஒன்டாரியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களை மருத்துவ கல்லூரிகளில் சேர்ப்பதில்லை என தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடாவிலுள்ள (Canada) ஏனைய வெளிநாட்டு மாணவர்களுக்கும் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் கருத்துக்கள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.