;
Athirady Tamil News

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – அநுரவை எச்சரிக்கும் நாமல்

0

நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்றைய தினம் (25.10.2024) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க தூதரகத்தினால்; எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், சர்வதேச புலனாய்வு பிரிவுகள், அமைப்புக்கள் என்பனவற்றுடனும் முப்படையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.