நாம் பிரகாசமான வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்
தமிழ் மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில் நாம் ஒரு பிரகாசமான வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் . நகர் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போதே ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ் . நகர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டோம். பிரசுரங்களை விநியோகிக்கும் போது மக்களின் கருத்துக்களை கேட்கும் போது, அனைவரும் மாற்றம் ஒன்றினையே விரும்புவதாக தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துக்கள் படி பிரகாசமான ஒரு வெற்றியை நோக்கி நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.