10 ரூபாய் காசு இனி செல்லாதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
ரூ.10 நாணயங்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.10 நாணயங்கள்
ரூ.10 நாணயங்கள் குறித்து பல தவறான கருத்துகள் சமீப காலமாக பரவி வருகிறது. எனவே இது தொடர்பாக இந்தியன் வங்கி சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த நாணயங்கள் சட்டப்பூர்வமானது. தினசரி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த புழக்கத்தை வணிக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி தகவல்
இருப்பினும், பலர் இன்னும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். இதன் காரணமாக சந்தையில் இந்த நாணயங்களின் சுழற்சி வெகுவாக குறைந்துள்ளது.
இதேபோல் சந்தையில் ரூ.10 நோட்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாணயம் செல்லாது என இதுவரை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.