;
Athirady Tamil News

பெரமுன கட்சிக்கு களங்கம் விளைவித்த குற்றத்தில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கம்

0

மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி, கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை ஆகிய காரணங்களுக்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றசாட்டில் ஈசன் என அழைக்கப்படும் ம. பரமேஸ்வரன் என்பவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர்மீதான முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அந்நபரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மத்தியகுழு பரிசீலித்து அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

இத்தீர்மானம் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் திரு. நாமல் ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நபரால் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட மற்றும் இனிமேல் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்காது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும், கட்சி நலன் மற்றும் மக்கள் சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை சட்ட விரோத, ஊழல் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.