கீழே கிடைத்த 20 டொலர் மூலம் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி
தற்செயலாக சாலையில் கீழே கிடைத்த 20 டொலர் கொண்டு லொட்டரி சீட்டு வாங்கி கிட்டத்தட்ட 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார்.
20 டொலர் கீழே கிடந்தது எடுப்பதே சிலருக்கு அதிர்ஷ்டம் தான்.
அனால் அந்த கீழே கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி லொட்டரியில் வெற்றி பெறுவது என்பது மிகப்பாரிய அதிர்ஷ்டமாகும்.
இவ்வாறே, அமெரிக்காவின் வட கரோலினாவின் ஜெர்ரி ஹிக்ஸ் (Jerry Hicks) என்பவர் சாலையில் கீழே கிடந்த 20 டொலரை 1 மில்லியன் டொலர் ( இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.30 கோடி)பரிசாக மாற்றினார்.
வட கரோலினாவின் Banner Elk பகுதியில் வசிக்கும் ஹிக்ஸ், Boone நகரில் உள்ள Speedway எனும் கன்வினியன்ஸ் ஸ்டோர் அருகே செவ்வாய்கிழமை அந்த 20 டொலரை கண்டெடுத்தார்.
“அந்த பணத்தை பயன்படுத்தி $25 மதிப்புள்ள Extreme Cash என்ற லாட்டரி சீட்டை வாங்கினேன்” என அவர் கூறினார்.
வெற்றியை உறுதிப்படுத்திய பிறகு, வெள்ளிக்கிழமை அவர் வட கரோலினா கல்வி லொட்டரி தலைமையகத்தில் சென்று பரிசை பெற்றார்.
lump-sum (மொத்தத் தொகை) சலுகையைத் தெரிவு செய்த ஹிக்ஸ், வரி கழித்து $429,007 (ரூ.12.6 கோடி) வீட்டிற்கு கொண்டு சென்றார்.