ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்
ஜேர்மனி பல துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதால், தேவையான திறன்களைக் கொண்ட வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு விசா பெறுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டுக்கான European Labour Authority (ELA) அறிக்கையில், 70-க்கும் மேற்பட்ட துறைகளில் தொழிலாளர் தேவையை கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து, மருத்துவம், கட்டிடத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் திறமையான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இதன் அடிப்படையில், அதிக தேவை உள்ள 15 முக்கிய தொழில்கள் பின்வருமாறு:
1. கனரக வாகன ஓட்டுநர்கள் (டிரக், லொறி, பேருந்து, டிராம் ஓட்டுநர்கள்)
2. ரயில்வே ஆபரேட்டர்கள் (பிரேக், சிக்னல் மற்றும் சுவிட்ச் நிபுணர்கள்)
3. இயந்திர ஆபரேட்டர்கள் (காகிதம், ரப்பர், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்கள்)
4. மின்னணு மெக்கானிக் நிபுணர்கள்
5. மின்தொழில் பணியாளர்கள் 6. பிளம்பர்கள் மற்றும் ஃபிட்டர்கள்
7. கட்டுமான மேற்பார்வையாளர்கள் 8. ஓவியர்கள் மற்றும் வார்னிஷ் வேலை செய்பவர்கள்
9. செங்கல் அடுக்கும் பணியாளர்கள் மற்றும் கொத்தனார்கள்
10. சுகாதார உதவியாளர்கள்
11. உடலியக்க நிபுணர்கள் (Physiotherapists)
12. பொறியியல் தொழில்நுட்ப நிபுணர்கள்
13. Software Developers மற்றும் Applications Programmers
14. ஆரம்பகால குழந்தை வளர்ப்பு ஆசிரியர்கள்
15. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
மேலும், ஜேர்மனி தேவையான வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்க குடியுரிமை விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது.
குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவமுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெற்றவர்கள் ஜேர்மன் வேலை விசா பெற முடியும்.
குடும்ப இணைப்பு விதிமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. EU ப்ளூ கார்டு பெறவும், தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன, இதன் மூலம் முக்கிய பணியிடங்களை நிரப்ப முடியும்.