100 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா! முன்னிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்மீனியா
2023-24ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பகுதியை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அர்மீனியா பிடித்துள்ளன.
இந்த மூன்று நாடுகள் மட்டும் ரூ.21,083 கோடி (சுமார் $2.6 பில்லியன்) மதிப்பில் இந்தியாவிலிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளன.
பிரபலமான ஆயுதங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்கள்
இந்தியாவின் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் 100 நாடுகளுக்கு பிரம்மோஸ் சுப்பர்சோனிக் ஏவுகணைகள், Dornier-228 விமானங்கள், அகாஷ் ஏவுகணைகள், 155மிமீ தோட்டாக்க்கள், Pinaka ரொக்கெட்டுகள், ரேடார்கள் மற்றும் கவச வாகனங்களை ஏற்றுமதி செய்கின்றன.
அர்மீனியா, குறிப்பாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட அகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், Pinaka ரொக்கெட் மற்றும் 155மிமீ ஆர்டிலரி தோட்டாக்க்களை வாங்கிய முதல் நாடாகும்.
இந்த ஒப்பந்தங்கள், அர்மீனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் நடந்த Nagorno-Karabakh போரின் போது கையெழுத்தாகியதாக தெரிகிறது.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் – முக்கிய கொள்முதல்கள்
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில், Boeing மற்றும் Lockheed Martin போன்ற உலகப் பிரமுகர்களுக்கு உபகரணங்கள் மற்றும் கலப்பாகங்கள் அடங்கும்
ஹைதராபாத்தில் உள்ள Tata Boeing Aerospace நிறுவனத்தில் Apache தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கான fuselage மற்றும் பிற துணை அமைப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
பிரான்ஸ் முக்கியமாக மென்பொருள் மற்றும் மின்னணு உபகரணங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறை
அகில உலகத்தில் தனக்கே உரிய பாதுகாப்பு தொழில் துறையை உருவாக்குவதற்காக இந்திய அரசு Make in India திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2028-29க்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியும், ரூ.50,000 கோடி மதிப்பிலான ஆயுத ஏற்றுமதியையும் எட்ட அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது.
தற்போது, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் 430க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற நிறுவனங்கள், 16 பாதுகாப்பு பொது நிறுவனங்கள் மற்றும் 16,000 MSMEக்கள் செயல்பட்டு வருகின்றன.
2014-15க்கு முன்னால் இருந்ததை விட உற்பத்தி மதிப்பு மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மிகப்பாரிய இறக்குமதியாளராகவும் இந்தியா
சுயமாக ஆயுதங்களை தயாரிக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், 2019-23 காலக்கட்டத்தில் உலகின் மிகப்பாரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது, அதில் 9.8% இந்தியாவின் இறக்குமதியாகும்.