;
Athirady Tamil News

உக்ரைனுக்கு கவச வாகனங்களை அனுப்பிவைத்த கனடா

0

கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை, உக்ரைனுக்கு முதல் தொகுதி LAV (Light Armored Vehicles) கவச வாகனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறித்து குறிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

கனேடிய ஆயுதப்படைகள் (CAF) உக்ரைனின் பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு அளிக்கும் பணியின் கீழ், இந்த தகவலை சமூக ஊடகமான X-ல் பகிர்ந்துள்ளது.

இந்த கவச வாகனங்கள், ஜேர்மனியில் வாகன இயக்கத்திற்கும் பராமரிப்பு முறைகளுக்கும் பயிற்சி பெற்ற பிறகு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த வாகனங்களில் ‘அம்புலன்ஸ்’ பதிப்பு உக்ரைனின் பாதுகாப்பு முயற்சிகளில் முக்கிய பங்கை வகிக்குமென CAF குறிப்பிட்டுள்ளது.

மேலும், உக்ரைனின் நிதியமைச்சர் செர்ஹி மார்சென்கோ, அக்டோபர் 11-ஆம் திகதி கனடா அரசுடன் 400 மில்லியன் கனடிய டொலர்கள் (சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கடனுக்கு நான்காவது கூடுதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.