;
Athirady Tamil News

ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

தேஷ்பந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மனு, பிரேரணை மூலம் அழைக்கப்பட்ட போது, ​​மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிப்பிட அனுமதி கோரியுள்ளார்.

விசாரணை

இதனை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று (29) பிரிதி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.