;
Athirady Tamil News

பரீட்சைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாணவர்கள் முறைப்பாடு

0

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை 2024(2025) வலயமட்ட மற்றும் மாகாணமட்ட பரீட்சைகள் தொடர்பில் மட்டக்கள்ப்பு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களாகிய நாங்கள் கிழக்கு மாகாண ஆளுநராகிய தங்களுக்கு முன்வைக்கும் முறைப்பாடு யாதெனில்,

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்டபாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரத்தில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களாகிய எங்களுக்கு 06.08.2024 தொடக்கம் 15.08.2024 வரையான காலப்பகுதியில் 2ம் தவணைப்பரீட்சைகள் முடிவடைந்து ஒரு வாரகாலம் விடுமுறைவழங்கப்பட்டு 28.08.2024இல் 3ம்தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

வலயமட்ட பரீட்சைகள் 03 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் முதற்கட்டம் 13.09.2024 – 09.10.2024 வரையானகாலப்பகுதியில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பரீட்சை வினாத்தாள்களை திருத்தம் செய்து புள்ளிப்பகுப்பாய்வுகளில் ஈடுபடுகின்றார்கள்.

இந்நிலையில் அவர்களால் வகுப்பறையில் கற்பித்தலைமேற்கொள்வதற்கு சிரமமாகவுள்ளதால் பாடங்களை ஆழமாக கற்றுத்தர முடியாத நிலையில் மிகவும் துரிதமாகமுடிக்கின்றனர். 2ம் கட்டப் பரீட்சையினை 18.10.2024 -16.11.2024 வரை ஒவ்வொரு வெள்ளி அல்லது புதன்கிழமைகளில் நடத்துகின்றனர்.

மறுபடியும் ஆசிரியர்கள் பரீட்சை வினாத்தாள்களை திருத்தம் செய்து புள்ளிப்பகுப்பாய்வுகளில் ஈடுபடுவர். இதற்கிடையே மாகாணமட்ட நிலையறி பரீட்சையானது 3ம் தவணைக்குரிய முமுமையான பாட அலகுகளில்04.11.2024 – 14.11.2024 நடாத்த திட்டமிடப்பட்டு பாடசாலைகளுக்கு நேரசூசி வழங்கப்பட்டுள்ளது.

3ம் தவணைக்குரியபாடங்கள் முடிக்கப்படாத நிலையில் இடைநடுவே இப்பரீட்சையை நடாத்துவது பொருத்தமற்றது. மாணவர்களாகிய நாங்கள் நடாத்தப்பட்ட பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெறுவதால் பாடசாலை சமூகத்தாலும் பெற்றோராலும் உளரீதியாக பாதிக்கப்படுகின்றோம். தொடர்ந்து பரீட்சைக்கு முகம் கொடுப்பதென்பதும் விருப்பமற்றதாகவுள்ளது.

இதனால் மாணவர்களாகிய எங்களுக்கு கற்றலில் ஆர்வம் குறைகின்றது. எனவே மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பொதுப் பரீட்சைகளின் அடைவுமட்டத்தை மட்டும் கருத்திற் கொண்டுசெயற்படாது எதிர்காலத் தலைவர்களாகிய எங்களது உளநலனையும் சிந்தித்து பாடசாலைகளுக்கு 3ம் தவணைக்குரிய பாடங்களைமுடிப்பதற்கான கால அவகாசத்தைக் கொடுத்து தேவையான பரீட்சைகளை நடாத்தும்படி அறிவுறுத்தல் வழங்குமாறு தங்களைமிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெறுபேறுகளில் மட்டுமல்லாது மாணவர்களின் உள நலனிலும் தாங்கள் கவனம் செலுத்துவீர்கள் என ஆழமாகநம்புகிறோம் என மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்கள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.