;
Athirady Tamil News

வடக்கு மாகாண ஆளுநரின் விரைவான நடவடிக்கை

0

யா/ கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோரை நேற்று(29.10.2024) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் சந்தித்தார். பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த திங்கட்கிழமை(28) ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்திருந்தனர் என்ற செய்தியை அறிந்து கொண்ட ஆளுநர் அவர்கள் இந்த நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள பணித்தார்.|

பாடசாலைக்குரிய ஆசிரியர்களை விரைவாக நியமனம் செய்யுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். பாடசாலையானது மாணவர்களின் நலன்கள் சார்ந்து இயங்க வேண்டும் எனவும் கிராமப்புற பாடசாலைகள் நகரப்புற பாடசாலைகளுக்கு சமனாக, குறைபாடுகள் இன்றி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து பிரதேசங்களுக்கும் சமனாக சேவைகள் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிப்பு அடையாத வகையில் ஏனைய செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.