சப்ரகமுவ பாடசாலைகளுக்கும் தீபாவளி சிறப்பு விடுமுறை
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் குறித்த விடுமுறை தினத்துக்கு பதிலாக நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (01) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.