இரண்டு பிள்ளைகளுடன் நயாகரா அருவியில் குதித்த தாயார்: வெளிவரும் பின்னணி
திங்கட்கிழமை இரவு நயாகரா அருவியில் குதித்த தாயாரும் அவரது இரண்டு பிள்ளைகளும் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை முடிவுடன்
நியூயார்க் மாகாண பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 33 வயதான Chaianti Means அவரது 9 வயது மற்றும் பிறந்து 5 மாதங்களேயான பிள்ளைகளுடன் நயாகரா அருவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் திட்டமிட்டே அவர்கள் குதித்துள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
லூனா தீவு என்பது அமெரிக்க அருவிக்கும் பிரைடல் வெயில் அருவிக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய தீவு ஆகும். இதனாலையே சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடுகின்றனர்.
நண்பர்கள் பலர் இரங்கல்
இந்த நிலையில் அருவியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாயாரும் இரு பிள்ளைகளையும் தேடும் பணிக்கு ட்ரோன் விமானம் மற்றும் நீருக்கடியில் தேடும் பிரிவையும் விசாரணைக்கு என களமிறக்கியுள்ளனர்.
தொடர்புடைய குடும்பமானது நயாகரா அருவி பகுதியில் குடியிருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, தற்கொலை செய்துகொண்ட அந்த தாயார் குடும்ப வன்முறைக்கு எதிரான ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். அவரது நண்பர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.