;
Athirady Tamil News

நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : குப்பை வண்டியை ஓட்டி ட்ரம்ப் பிரசாரம்

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்(donald trump), குப்பை வண்டியை ஓட்டி வந்து தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala hariris) மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை(joe biden) அவமதித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடைபெற்ற இறுதிக்கட்ட பேரணியில் உரையாற்றுவதற்காக டிரம்ப் விஸ்கான்சின் வந்தடைந்தார்.அங்கு அவர், துப்புரவுத் தொழிலாளி போல் உடையணிந்து, குப்பை வண்டியை ஓட்டிக்கொண்டு, விஸ்கான்சினில் உள்ள கிரீன் பேயில் உள்ள ஆஸ்டின்-ஸ்ட்ராபிள் சர்வதேச விமான நிலையத்தில் தனது விமானத்தில் இருந்து வந்தார்.

டிரம்பைப் பார்ப்பதற்காக விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள்

டிரம்பைப் பார்ப்பதற்காக விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தபோது டிரம்ப் விமானத்தில் இருந்து இறங்கி குப்பை வண்டியில் ஏறினார். டிரம்பிற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சார ஸ்டிக்கர்களால் குப்பை வண்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

குப்பை வண்டி வட்டமாகச் சென்று, செய்தியாளர்களை நெருங்கியது, டிரம்ப் ஓட்டுநர் இருக்கையில் இருந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ​​ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோரை டிரம்ப் அவமதித்தார்.

டிரம்ப் மற்றும் டிரம்பின் ஆதரவாளர்களை பயனற்ற ‘குப்பை’

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ம் திகதி நடக்கிறது. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தற்போது தங்களது கடைசி தேர்தல் பேரணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பேரணியில், கமலாவை ஆதரித்து அவருடன் இணைந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், டிரம்ப் மற்றும் டிரம்பின் ஆதரவாளர்களை பயனற்ற ‘குப்பை’ என்று அழைத்தார்.

இதுவே டிரம்பின் கோபத்திற்கு காரணம். ‘ஆம், நாங்கள் குப்பைகள், அதனால்தான் இந்த குப்பை வண்டியை ஓட்டுகிறேன்’ என்று குப்பை வண்டியின் சாரதி இருக்கையில் இருந்து செய்தியாளர்களிடம் டிரம்ப் விளக்கினார். டிரம்ப் பின்னர் விஸ்கான்சினில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார், அங்கு அவர் துப்புரவு தொழிலாளி போல் உடையணிந்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.