;
Athirady Tamil News

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலையிலும் மாற்றம்!

0

இலங்கையில் உள்ள சினோபெக் எரிபொருள் நிறுவனமும் நேற்று (31-10-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371.00 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313.00 ரூபாவாகும்.

மேலும், 280 ஆக இருந்த ஆட்டோ டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 283.00 ஆக உள்ளது.

311.00 ரூபாவாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.