;
Athirady Tamil News

தேசிய மக்கள் சக்தியுடன் இணையும் சுயேட்சைக்குழு 21 – 8 அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு

0
video link-

கல்முனை முஸ்லீம் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து வாழும் பகுதியாகும்.இந்த பிரதேசத்தில் முஸ்லீம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள்.தமிழ்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன் இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லீம் தமிழ் ஆகிய இனங்களுக்கு இரண்டு பிரதேச செயலகம் இயங்குவது நாட்டின் இறையாண்மைக்கும் இன நல்லுறவிற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும்.எனவே இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்து ஒரு இனத்திற்கு என்று பிரதேச செயலகம் ஒரு சமூகத்திற்கு என்று பிரதேச செயலகம் இல்லாமல் இந்த பிரதேச செயலகத்தின் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்து பிரதேச செயலகத்தினை ஒரே ஒரு பிரதேச செயலகமாக மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என திகாமடுல்ல மாவட்டத்தின் சுயேட்சைக்குழு 21 இல் போட்டியிடும் செயற்பாட்டாளர் றியாஸ் தெரிவித்தார்.

அம்பாறை திகாமடுல்ல மாவட்டத்தின் சுயேட்சைக் குழு-21 இல் கைக்கோடாரி சின்னத்தில் இளம் தொழிலதிபர் டி.எம்.எம் ஹினாஸ் தலைமையில் கல்முனை செயிலான் வீதியில் அமைந்துள்ள சுயேட்சைக் குழுவின் தேர்தல் காரியாலயத்தில் வியாழக்கிழமை(31) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலம் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு ஒன்றினை தெரிவு செய்து தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.தேர்தலில் சுயேட்சைக்குழுக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக களமிறக்கப்பட்ட போதிலும் எமது 10 அங்கத்தவர்களை கொண்ட இளைஞர்கள் சுமார் ஆயிரக்கணக்கான வாக்குகளை கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் ஊடாக எங்களுக்கு நடந்த அநீதிகளையும் துரோகத்தையும் முறியடிக்கும் விதமாக ஒன்று சேர்ந்திருக்கின்றோம்.இதற்காக எமது சுயேட்சை குழு -21 க்கு வாக்களிப்பதன் ஊடாக எம் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

பாராளுமன்ற ஆசனம் ஒன்றினை நாங்கள் பெறுவதென்றால் சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும்.அந்த வாக்குகளை இறைவன் எங்களுக்கு தந்தால் நாங்களும் ஒரு ஆசனத்தை பெறக் கூடிய வாய்ப்பு இருக்கும்.தற்போதைய தேர்தல் களம் அவ்வாறில்லை.எமது பிரதிநிதித்துவம் எமது வாக்கு பிரிந்து செல்லக்கூடிய நிலை தான் இருக்கின்றது.இதனால் நாங்கள் ஒரு முக்கியமான தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்கு கூடி இருக்கின்றோம்.8 அம்ச கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகி உள்ளார்.அவர் பாராளுமன்றத்தில் அதிக ஆசனம் பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒரு முடிவினை எடுத்துள்ளோம்.அதன்படி எமது சுயேட்சைக்குழு 21 ஆனது 8 அம்ச கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்துள்ளது.

எமது 8 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் எதிர்வரும் 14 ஆந் திகதி நாங்கள் தேசிய மக்கள் சக்தியை கல்முனை தொகுதியில் வெற்றி பெற வைக்க முயற்சிகளை மேற்கொள்வோம்.இந்த 8 அம்ச கோரிக்கையில் முதலாவது கோரிக்கையாக கல்முனை சட்டவிரோத செயலக விவகாரம் .அதாவது கல்முனை முஸ்லீம் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து வாழும் பகுதியாகும்.இந்த பிரதேசத்தில் முஸ்லீம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள்.தமிழ்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன் இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லீம் தமிழ் ஆகிய இனங்களுக்கு இரண்டு பிரதேச செயலகம் இயங்குவது நாட்டின் இறையாண்மைக்கும் இன நல்லுறவிற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

எனவே இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்து நாட்டின் ஜனாதிபதி அவர்கள்.இனம் மதம் ஊழல் ஒரு இனத்திற்கு என்று பிரதேச செயலகம் ஒரு சமூகத்திற்கு என்று பிரதேச செயலகம் இல்லாமல் இந்த பிரதேச செயலகத்தின் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்து பிரதேச செயலகத்தினை ஒரே ஒரு பிரதேச செயலகமாக மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இந்த கோரிக்கையை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என நம்புகின்றோம் என குறிப்பிட்டனர்.

மேலும் கல்முனை பிரதேச செயலகம் மாநகர சபை மற்றும் கல்முனை பொதுச்சந்தை ஆகியன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகள் எம்மால் முன்வைக்கபட்டு தேசிய மக்கள் சக்தியினரிடம் இரவு கையளிக்கப்படும் .அத்துடன் இவை சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டால் தேசிய மக்கள் சக்திக்கு அதாவது திசைகாட்டிக்கே எமது முழு ஆதரவும் வழங்கப்படும் என திகாமடுல்ல மாவட்டத்தின் சுயேட்சைக்குழு 21 இல் போட்டியிடும் செயற்பாட்டாளர் றியாஸ் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.