ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
ஜார்கண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில் காலை 9.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மூத்த வானிலை ஆய்வாளர் உபேந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ரிக்டர் அளவில் 3.6 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி, மீட்டராக இருந்தது. நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
நிலநடுக்கத்தின் பாதிப்பு சிறிது என்றாலும், செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தின் ஜாம்ஷெட்பூர் மற்றும் கந்த்ராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.