;
Athirady Tamil News

பதுளை விபத்தில் படுகாயமடைந்தவர்களின் தற்போதைய நிலை!

0

பதுளை பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துன்ஹிந்த – பதுளை வீதியில் நேற்று (1) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

40 பேர் வைத்தியசாலையில் அனுமதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பத்து பேரில் சிலர் இன்று பொது வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் தொடர்பில் அவர் மேலும்கூறுகையில் , “பேருந்து விபத்தில் காயமடைந்த 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பத்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தற்போது குணமடைந்து உள்ளனர். காயமடைந்த அனைவரினதும் உயிர் ஆபத்து நீங்கிவிட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பத்து பேரில் சிலர் இன்று பொது வார்டுக்கு மாற்றப்படலாம்.

மேலும் சிலர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் இருந்து வௌியேறவுள்ளனர். தற்போதைய நிலவரப்படி எந்தவொரு நோயாளியையும் விமானத்தில் கொழும்புக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.