;
Athirady Tamil News

50 ஏக்கரில் உருவாக உள்ள நகர்ப்புற வனம் – சென்னையில் எங்கு தெரியுமா?

0

சென்னையில் 50 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நகரமயமாதல்
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் நகரங்களில் உள்ள வனப்பகுதி குறைந்து வருகிறது.

மேலும், நாள்தோறும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்கள் காரணமாக கிளம்பும் புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது.

நகர்ப்புற வனம்
இதனால் சென்னையில் பசுமையை அதிகரிக்கும் வகையில் நகர்ப்புற வனம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் வனத்துறை இணைந்து சிறுசேரி சிப்காட் அருகே 50 ஏக்கரில், ரூ.5 கோடி செலவில் இந்த நகர்ப்புற வனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த 50 ஏக்கரில் 2 பெரிய குளங்கள்; 17 சிறிய குளங்கள், 50 இடங்களில் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 77 வகைகளை சேர்ந்த 3000 மரங்கள், 25 வகையான 500 பூச்செடிகள், 25 வகையான 250 மூலிகைச் செடிகள் கொண்ட மூலிகை பூங்கா உயிரி தடுப்பு வேலிகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

தற்போது இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பூங்கா பயன்பாட்டிற்கு வரும் பொழுது நகர பசுமை பரப்பு அதிகரிப்பதுடன், நகரப்புற மக்களின் பொழுது போக்கு பூங்காவாகவும் திகழும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.