;
Athirady Tamil News

ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து குடிக்கும் மக்கள் – வைரலாகும் வீடியோ

0

ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து மக்கள் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கிருஷ்ணர் கோவில்
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பாங்கே பிகாரி என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோவிலுக்கு சென்ற யூ டியூபர் ஒருவர் அங்கு நடந்த சம்பவம் ஒன்றை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

ஏசி நீர்
இந்த வீடியோவில், அந்த கோவிலில் உள்ள பக்தர்கள், சுவற்றில் யானை வடிவ குழாய்கள் வழியாக வடியும் நீரை கிருஷ்ணரின் தீர்த்தமாக நினைத்து ஒரு கப்பில் பிடித்து அருந்தி வருகின்றனர். அந்த நீர் புனித நீர் அல்ல. ஏசியிலிருந்து வரும் நீர் என அந்த நபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்கள் அந்த நீரை தொடர்ந்து தங்களது தலையில் தெளித்து கொள்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவிலில் நடந்த இந்த தவறுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கோருகின்றனர். பக்தர்கள் தவறாக ஏசி தண்ணீரை உட்கொள்வது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.