;
Athirady Tamil News

உத்தரகண்டில் பேருந்து விபத்து: 37 ஆக உயர்ந்த பலி!

0

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் 55 பயணிகளை ஏற்றிகொண்டு கார்வாலில் இருந்து குமாவோனுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மார்ச்சுலா என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இதுவரை 37 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் காவல்துறையும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டு ஓடும் விடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி இரங்கல்

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.

அதோடு, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல்

இந்த விபத்து கவலை அளிப்பதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகாமையில் இருக்கக் கூடிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும், தேவைப்பட்டால் படுகாயமடைந்தவர்களை மீட்டுச் செல்ல ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வர நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.