அநுர அரசுக்கு கேட்காமலேயே கொடுத்த உலகவங்கி : டில்வின் சில்வா பெருமிதம்
அநுர அரசுக்கு உலக வங்கி(world bank) 200 மில்லியன் டொலர்களை கேட்காமலேயே வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(tilvin silva) தெரிவித்துள்ளார்.
மிரிஹானவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேட்காமலேயே கொடுத்த உலகவங்கி
இந்த நாட்டில் சர்வதேச ஆதரவைப் பெற்ற அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறியுள்ளது என்றார். ‘
நாங்கள் கேட்காமலேயே உலக வங்கி நமது அரசுக்கு 200 மில்லியன் டொலர்களை சமீப நாட்களில் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கொடுத்துள்ளது’ என்றார்.
இதேவேளை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வாவின் செயற்பாடுகளை பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையாக விமர்ச்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.