ஒரே நாளில் கொல்லப்பட்ட 1410 ரஷ்ய வீரர்கள்: உக்ரைனுக்குள் புகுந்த வட கொரியா ராணுவம்!
வட கொரிய படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் முதல் முறையாக எதிர்கொண்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டரை ஆண்டுகளை தாண்டி அடுத்தடுத்த கட்டங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைனிய அதிகாரிகளின் தகவல் படி, இதுவரை 699,090 வீரர்களை ரஷ்யா ஒட்டுமொத்தமாக இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் சமீபத்தில் உக்ரைன் பாதுகாப்பு படை வீரர்கள் ஒரே நாளில் 1410 ரஷ்ய ராணுவ வீரர்களை கொன்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்யா வட கொரிய ராணுவ வீரர்களை உக்ரைனில் போரில் களமிறக்கி இருப்பதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உட்பட மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இதனை ரஷ்யா மற்றும் வட கொரிய அரசு அதிகாரிகளும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், உக்ரைன்-ரஷ்யா போரானது 3வது உலக போரை தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
வட கொரிய படைகள்
இந்நிலையில் வட கொரிய ராணுவ படைகளை உக்ரைனின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனிய வீரர்கள் முதல் முறையாக எதிர்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைனின் பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய அதிகாரி Andriy Kovalenko, குர்ஸ்க் பிராந்தியத்தில் DPRK படைகள் முதல் துப்பாக்கி சூட்டை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியானது தனிப்பட்ட முறையில் உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும் சமீபத்தில் வெளியான செய்திகளில் 15,000 வட கொரிய வீரர்களை உக்ரைனின் போரில் ரஷ்யா களமிறக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.