விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா
மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில் அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அந்த மாதத்தில் 2,019 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
பால் மா உற்பத்தி அதிகரிப்பு
மில்கோ நிறுவனம் இது தொடர்பில் தெரிவிக்கையில், நிறுவனம் பால் மா உற்பத்தியை அதிகப்படுத்தியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த மூன்று மாதங்களாக பால் பண்ணையாளர்களிடமிருந்து தினமும் 160,000 லீற்றர் பால் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 78,000 லீற்றர் பால் கொள்வனவு செய்யப்பட்டது.
வருமானம் அதிகரிப்பு
கடந்த ஜூலை மாதம் மில்கோவின் வருமானம் 1,873 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஓகஸ்ட் மாதத்தில் 1,715 மில்லியனாகவும், செப்டம்பரில் 1,642 மில்லியனாகவும் வருவாய் இருந்தது.
பால் மா மற்றும் தயிர் விற்பனை மூலம் அதிக வருமானத்தை மில்கோ நிறுவனம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.